சமூக ஊடகங்களில் ‘லைக்’ மற்றும் ‘வியூஸ்’ பெறுவதற்காக சிலர் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பெண்மணி ரீல்ஸ் செய்வதற்காக தான் கட்டியிருந்த சேலையின் ஒரு பகுதிக்குத் தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். சேலை பற்றி எரிந்து கொண்டிருக்க, அவர் துணிச்சலாக டான்ஸ் ஆடி, பல்லுவை அங்கும் இங்கும் அசைத்து ஸ்டெப்ஸ் போட்டார்.
அருகில் நின்ற ஒருவர் இந்த முழு காட்சியையும் வீடியோவாகப் பதிவு செய்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாகசமாகத் தோன்றினாலும், சில நொடிகளில் நிலைமை கைமீறிப் போனது. மளமளவெனத் தீ வேகமாகப் பரவ ஆரம்பித்ததால், பதறிப்போன அந்தப் பெண் உடனடியாகச் சேலையை அவிழ்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இந்த 12 விநாடி ஷாக்கிங் வீடியோ சமூக ஊடக தளமான ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் @maheshb20727795 என்ற ஐடி மூலம் பகிரப்பட்டு, இதுவரை 1,00,000-க்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
"जब आप तय कर लें कि रील बनेगी, चाहे लाइफ रहे या न रहे! 🤯"आपको क्या लगता है रील जरूरी है या जीवन (कृपया इसे नकल करने की कोशिश न करें) pic.twitter.com/Qi9S3g3JVY
— Mahesh Chandra Bhatt (@maheshb20727795) October 17, 2025
இந்த விபரீதச் செயலைக் கண்ட நெட்டிசன்கள் கோபத்துடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இது என்ன பைத்தியக்காரத்தனம்?”, “ரீல்ஸ் மோகம் இவ்வளவு ஆபத்தானதா?” என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதுபோன்ற முட்டாள்தனமான சாகசங்கள் மற்றவர்களுக்கும் தவறான வழிகாட்டுதலை அளிக்கும் என்றும், லைக்ஸ் மற்றும் வியூஸுக்காக யாரும் தங்கள் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தக் கூடாது என்றும் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.
