தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று (அக். 22) 12 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் — கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை,சிவகங்கை ,புதுக்கோட்டை ,காஞ்சிபுரம்  ஆகியவையாகும். அதேபோல், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பிற மாவட்டங்களிலும் நிலைமையை மதிப்பீடு செய்து, தேவையான விடுமுறை அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது