திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர், அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். இவர் திருமணமானவர்; மனைவியும் 17 வயது மகளும் உட்பட இரு மகள்களும் உள்ளனர்.
சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த அந்த நபர், வீட்டில் இருந்த தனது மூத்த மகளிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர்.
பின்னர் அவர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடைபெற்றபோது, சிறுமி தந்தை தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை நீதிபதி கருத்தில் கொண்டு, அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
