சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. வீடியோவில், கையில் நீளமான குச்சி, தோளில் துணி, காலில் செருப்புடன் ஓடும் ஒரு சிறுவனை பின் தொடரும் நூற்றுக்கணக்கான மாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியாகப் பெயரால் அழைக்கும் அந்த சிறுவனின் திறமைக்கு மக்கள் கைதட்டுகின்றனர்.
गुजरात का छोटा सा लड़का आज Facebook पर जबरदस्त viral है। लोग इसका गौ प्रेम देख इसे कह रहे “कलयुग का कन्हैया” pic.twitter.com/3GpDK1n4iY
— Shaurya Mishra (@shauryabjym) October 11, 2025
“கலியுகத்தின் கனையா” என்று சமூக வலைதளங்களில் பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில், பிங்க் நிறக் குர்தா, வெள்ளை பைஜாமாவும் அணிந்த சிறுவன், ஒரு பசுமை பகுதிக்குள் ஓடிக்கொண்டிருக்க, பல மாடுகள் அவரைப் பின்தொடர்கின்றன.
சிறுவன் ஒவ்வொரு மாட்டையும் பெயர் சொல்லி அழைக்கும் போது, அந்த மாடு ஓடி வந்து சேரும் காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வீடியோவில் மேலும் இரண்டு பேர் கையில் குச்சிகளுடன் காணப்படுகின்றனர், ஆனால் மாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய செயலை அந்த சிறுவன் ஒருவனே ஆற்றுகிறான்.
இந்த வீடியோவை @shauryabjym என்ற கணக்கு X-ல் பகிர்ந்துள்ளது. இதுவரை 3.69 லட்சம் பார்வையாளர்கள் இதைப் பார்த்துள்ளனர். சிறுவனின் பெயர் ‘கிரண்’ என்றும், அவர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரணின் மாடுகளிடம் காட்டும் அன்பும், ஒவ்வொரு மாட்டையும் கட்டுப்படுத்தும் திறமையும் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலரும் இந்த சிறுவனை பாராட்டி, “இது தான் உண்மையான பண்பாட்டு வாரிசு” என கருத்து தெரிவித்துள்ளனர்.
