உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. பேய் ஓட்டுவதாக செய்வதாகக் கூறி, ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் டெல்லியில் தனியார் வேலைக்குச் சென்று வருகிறார். அவரது 5 வயது மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால், கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, அவரது மனைவி மகனை குணப்படுத்தும் நோக்கில் மக்கள் பரிந்துரை செய்த பேய் ஓட்டும் நிபுணர் தினேந்திர சரோஜிடம் சந்தித்துள்ளார்.

ஆனால், அவர் தனது மகனுக்கு பேய் ஓட்டுவதாக கூறி, மயக்கம் மருந்து கலந்த தண்ணீர் கொடுத்து மயக்க நிலையில் வைத்து பலத்த பாலியல் வன்கொடுமை நடத்தியதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த உடன், அந்த பெண் தவறான நிலையில் விழித்ததாகவும், தொடர்ந்து பல நாட்கள் மிரட்டல், குற்றவுணர்வு ஏற்படும் வகையில் ஆபாச வீடியோவை காட்டி பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

தாயின் SIM கார்டும் பறிக்கப்பட்டதால் எந்தவித தகவலும் வெளியே செல்லவில்லை. பின்னர் எப்படியோ கணவனிடம் விபரத்தைச் சொல்லியதும், அவர் டெல்லியிலிருந்து திரும்பி வந்து காவல்துறையில் புகார் செய்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.