உத்தரப்பிரதேசம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கவுடிராம் பகுதியில் உள்ள சந்தையில் நடந்த நகைக்கடை திருட்டுச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்ஸ்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மகாலட்சுமி நகைக்கடையில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மதியம் 1 மணியளவில் பர்தா அணிந்த பெண் ஒருவர் வாடிக்கையாளராக நடித்து நகைகளை பார்ப்பது போன்று நடந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DPygqt3AdUw/?igsh=MWNucDVjdnF0MW92Yw%3D%3D
கடை உரிமையாளர் உமேஷ் வர்மா உள்ளே சென்றதை பயன்படுத்தி, கவனத்தைச் சிதறடித்து ஒரு நகை தொகுப்பை உடையினுள் ஒளித்து திருட முயன்றுள்ளார்.
அந்த பெண் கடையை விட்டு வெளியேற முயன்றபோது, கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை நிறுத்தி போலீசாரை அழைத்தார். போலீசார் வந்து சோதனையிட்டதில், அவரது உடையில் ஒரு தங்க மோதிரம் மற்றும் இரு ஜோடி வெள்ளி மெட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், பர்தா அணிந்த பெண் எவ்வாறு நகைகளை எடுத்து உடையினுள் மறைத்து வைப்பது போன்ற சாட்சியங்கள் உள்ளது.
கைது செய்யப்பட்ட பெண், கோரக்பூர் நகரம், துர்க்மான்பூர் பகுதியைச் சேர்ந்த ஷஹ்னாஸ் என்ற அஃப்சரி என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பன்ஸ்கவான் வட்டார காவல் அதிகாரி அனுஜ் குமார் சிங், “நகை கடையில் திருட முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இதற்கான சம்பவம் தெளிவாக சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் அவரை சிறையில் அடைத்துள்ளோம்” என கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
