தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா, சமூக ஊடகங்களில் வெளியிட்ட சமீபத்திய பதிவால் சமந்தா ரசிகர்களிடம் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகர் நாக சைதன்யா, 2017-ஆம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். எனினும், 2021-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், சோபிதாவுடன் தனது உறவைப் பற்றி கவிதைபோன்ற கருத்துகளை நாக சைதன்யா சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் அவர், “அவர் இல்லாமல் நான் இல்லை” என சோபிதாவை பாராட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சமந்தா ரசிகர்கள் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தியுள்ளனர். “எங்கள் தலைவிக்கு துரோகம் செய்துவிட்டு இப்படிப் பதிவிடுவது எப்படி?” எனக் கேள்வி எழுப்பிய ரசிகர்கள், சமூக வலைதளங்களில் சைதன்யாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் உடல்நல பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்த நடிகை சமந்தா தற்போது திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பிசியாக உள்ளார். அண்மையில் வெளியான “சுபம்” என்ற திரைப்படத்தை அவர் தயாரித்ததுடன், அதில் சிறப்பு வேடத்திலும் நடித்திருந்தார். மேலும் பல பிராண்டுகளுக்கான விளம்பர தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.
சமந்தா ரசிகர்கள், “அவர் தன் முயற்சியால் முன்னேறிக் கொண்டிருக்கிறார்; கடந்த உறவை மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது தேவையில்லை” என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
