சமூக ஊடகங்களில் விலங்குகளைச் சுற்றிய பல்வேறு வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சில வேடிக்கையான காட்சிகள் பார்வையாளர்களை வெடித்துச் சிரிக்க வைக்கின்றன. இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு நாய் மற்றும் பூனை குறும்பு வீடியோ அனைவரையும் சிரிப்பில் மூழ்கச் செய்துள்ளது.
வீடியோவில், ஒரு பூனை தரையில் அமர்ந்திருக்கும் புறாவை பார்த்து, அதனை பிடிக்க மெதுவாக நகர்கிறது. அமைதியாக வேட்டையாடும் முயற்சியில் இருக்கும் பூனைக்குத் தெரியாமல், அதன் பின்னால் ஒரு நாய் திருட்டுத்தனமாக பின்தொடர்கிறது. சில வினாடிகள் கழித்து, நாய் திடீரென புறாவை விரட்டுகிறது. அதோடு, பூனைக்கே ஒரு பயத்தை ஏற்படுத்தி அதனை ஓட வைக்கிறது. காட்சி முழுவதும் பார்வையாளர்களை “டாம் அண்ட் ஜெர்ரி” கார்ட்டூன் நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது.
Wait for it…😁😁 pic.twitter.com/L0kMGgFvMp
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) October 9, 2025
மேலும் இந்த 23 வினாடிகள் கொண்ட வீடியோவை ஒரு பயனர் “எக்ஸ்” தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுவரை அந்த காணொளி 2.7 லட்சம் முறை பார்வையிடப்பட்டு, 4,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்து பல்வேறு நகைச்சுவை எதிர்வினைகள் பதிவு செய்துள்ளனர். ஒரு பயனர், “இவை இரண்டும் நகைச்சுவை நிகழ்ச்சியையும் விட வேடிக்கையானவை” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இன்றைய மன அழுத்தம் நிறைந்த சூழலில் இப்படியான வீடியோக்கள் உண்மையான மகிழ்ச்சியைத் தருகின்றன” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
