காட்டின் “ஜென்டில்மேன்” என அழைக்கப்படும் யானைகள் பொதுவாக தேவையற்ற மோதல்களில் ஈடுபடுவதில்லை. ஆனால் யாராவது சீண்டினால், தங்கள் வலிமையை காட்டுவதில் அவை பின் வாங்குவதில்லை. இதையே நிரூபிக்கும் வகையில், ஒரு யானைக்கும் காண்டாமிருகத்திற்கும் இடையிலான கடுமையான மோதல் காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இயற்கை உலகில் அன்றாடம் புதிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் இரைக்கும் மற்றும் இரையாகும் விலங்குகள் மோதும் நிலையில் காணப்படுகின்றன. சில வேளைகளில் சக்திவாய்ந்த விலங்குகள் ஒன்றுக்கொன்று எதிராக மோதுவது விலங்கு ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

 

அத்தகையதொரு காட்சியாக, இந்த யானை – காண்டாமிருகம் மோதல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. வீடியோவில், வலிமையோடும் கம்பீரத்தோடும் கூடிய யானை தனது தும்பிக்கையையும் தந்தங்களையும் பயன்படுத்தி காண்டாமிருகத்தை மிரட்டுகிறது. அதற்கு பதிலாக, காண்டாமிருகம் தனது கூர்மையான கொம்பினால் எதிர்த்து நின்று யானைக்கு சவால் விடுகிறது.

காண்டாமிருகம் பின்வாங்க மறுத்தாலும், யானையின் வலிமை அதனை தள்ளி வைக்கிறது. இருந்தாலும், காண்டாமிருகத்தின் உறுதியான மனப்பாங்கு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த 52 வினாடிகள் கொண்ட வீடியோவை “எக்ஸ்”  தளத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். இதுவரை அந்த வீடியோ 3.3 லட்சம் முறை பார்வையிடப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் அதை லைக் செய்து, பல்வேறு எதிர்வினைகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த சமூக ஊடக பயனர்கள், “காண்டாமிருகம் உண்மையான போர்வீரன்”, “யானை கூட அதன் துணிச்சலைக் கண்டு வியந்தது” போன்ற கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும், “ஒவ்வொரு விலங்குக்கும் தனித்துவமான வலிமை உண்டு; காடுகளில் எவரும் தாழ்ந்தவர் அல்ல” என்ற கருத்தும் பலரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.