இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வைரலாகி வருகிறது. இதில், இளைஞர் ஒருவர் படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்ச்சியுடன் பேசுகிறார். அதற்குப் பதிலாக, அவரது தந்தை, கரகாட்ட கலைஞராக இருக்கும் தனது போராட்டங்களை நினைவுகூர்ந்து பதில் அளிக்கிறார். “ஊர் ஊராகச் சென்று கரகாட்டம் ஆடி, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் உன்னை மூன்று டிகிரி படிக்க வைத்தேன்” என்று கூறி, அந்தக் கலையைப் பிடிக்காத பிள்ளை தனக்கு தேவையில்லை என்று வலியுடன் பேசுகிறார். இந்த உரையாடல், பெற்றோரின் தியாகத்தையும், பாரம்பரிய கலைகளின் மதிப்பையும் வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிமயமாக்குகிறது.

இந்தக் காணொளியில் தந்தை மேலும், “எனது கலையை நானே பார்த்துக்கொள்வேன். கிட்டத்தட்ட 350 பிள்ளைகளை தத்தெடுத்து, எனது கலையை வளர்த்து கொண்டிருக்கிறேன். இந்த ஒரு பிள்ளையினால் அந்த 350 பிள்ளைகளையும் இழக்கத் தயாராக இல்லை” என்று தெரிவிக்கிறார். இது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பலரும் கரகாட்ட கலைஞருக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வைரல் காணொளி, குடும்ப பந்தங்கள், பாரம்பரிய கலைகளின் பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் அளவிட முடியாத தியாகத்தைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.