உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் மிஷ்ரி பஜார் பகுதியில், புதன்கிழமை இரவு 7:15 மணிக்கு இரண்டு ஸ்கூட்டர்கள் திடீரென வெடித்தன. இந்த வெடிப்பு நெரிசலான சந்தையில் நடந்ததால், அருகிலிருந்த கடைகளும் வாகனங்களும் சேதமடைந்தன. இதில் எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் நாலு பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர், மற்ற நாலு பேர் பலத்த காயங்களால் லக்னோவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
ஒரு ஸ்கூட்டரின் உரிமையாளர் ஆஷ்வினி குமார் காயமடைந்தார், மற்றொரு ஸ்கூட்டரின் உரிமையாளர் விஜேந்தர் ராஸ்தோகி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தை சிசிடிவி கேமரா தெளிவாக பதிவு செய்துள்ளது. காவல்துறை விசாரணையில், இந்த வெடிப்பு சட்டவிரோதமாக சேமிக்கப்பட்ட பட்டாசு வெடிமருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. கன்பூர் காவல் ஆணையர் ரகுவீர் லால், “இது பட்டாசு அல்லது வேறு தவறான செயலால் நடந்திருக்கலாம். தீவிரமாக விசாரிக்கப்படுகிறது” என்று கூறினார்.
कानपुर ब्लास्ट का सीसीटीवी फुटेज।#KanpurBlast #Kanpur #blast https://t.co/yf8EteUlHz pic.twitter.com/r1ypZZkvZw
— SANJAY TRIPATHI (@sanjayjourno) October 9, 2025
ஃபாரன்சிக், பயங்கரவாத தடுப்பு குழு மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழு ஆகியவை சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரித்துள்ளன. பண்டிகை காலம் நெருங்குவதால், சட்டவிரோத பட்டாசு விற்பனையை தடுக்க காவல்துறை சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளது. முதலமைச்சர் அலுவலகம் இதுகுறித்து அறிக்கை கேட்டுள்ளது, மேலும் தேசிய விசாரணை அமைப்பு (என்ஐஏ) உதவி செய்யலாம் என்று தெரிகிறது.
