குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் பதிவாகிய ஒரு அதிர்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு ஆண் சிங்கம் திடீரென ஒரு பெண் சிங்கத்தை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. “காட்டின் அரசன்” என சொல்லப்படும் ஆண் சிங்கம், சிங்கத்தை தரையில் போட்டு வலுவாக தாக்கும் காட்சி வனவிலங்கு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த வீடியோவை அக்டோபர் 5-ம் தேதி, ராஜ்ய சபா எம்பியுமான *பரிமல் நாத்வானி தனது ‘@mpparimal’ எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சிகளில், பெண் சிங்கம் எதிர்த்து தாக்க முயன்றாலும், ஆண் சிங்கத்தின் வலிமையை எதிர்கொள்ள இயலாமல் தவிக்கும் நிலை தெளிவாக காணப்படுகிறது.

பின்னணியில் கேட்கப்படும் சிங்கங்களின் கொந்தளித்த கர்ஜனைகள், இந்த போராட்டத்தின் தீவிரத்தைக் காட்டுகின்றன. வனவிலங்கு நிபுணர்களின் கருத்துப்படி, இவ்வாறான தாக்குதல்கள் பெரும்பாலும் பிரதேச ஆதிக்கம், இணை சேர்க்கை சண்டை, அல்லது ஆட்சியாளராகும் போட்டி போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன.

வன்முறையாக தெரியலாம் ஆனால், இது காட்டின் இயற்கைச் சட்டத்தில் இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. தற்போது வரை இந்த சம்பவத்தில் எந்த விலங்குக்கும் தீவிரமான காயம் ஏற்பட்டதையோ, உயிரிழப்பையோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.