திருவாரூரில் மணிகண்டன் என்ற 25 வயது இளைஞருக்கும், தீபா என்ற 22 வயது பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக தீபா கடந்த ஒரு வருடமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். மணிகண்டன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தீபா தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பி, குடும்பத்தினருடன் அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால், மணிகண்டனின் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் கதவை பூட்டிவிட்டனர்.
இதனால் மனமுடைந்த தீபா, கணவருடன் பேச விடுமாறு மாமியாரிடம் கெஞ்சி, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கதறி அழுதார். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மகளிர் காவல்துறையினர் மற்றும் சமூக நல அலுவலர் சாயிராபானு, தீபாவிடம் பேசி அவரை சமாதானப்படுத்தினர். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தீர்வு அங்கு கிடைக்கும் எனவும், தீபா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, இரவு 8 மணி வரை காவல் நிலையத்தில் காத்திருந்தார்.
