உலகம் முழுக்க வித்தியாசமான சமையல் செய்பவர்கள் இருக்காங்க. ஆனால் இந்த சம்பவம் எல்லையைக் கடந்து போனது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோவில், ஃபான்டா, முட்டை, வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து ஒரு நபர் “புதுமையான புரிஜி” வெச்சு எல்லாரையும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் ஆழ்த்தியிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by STREET FOOD JOURNEY (@streetfoodjourn3y)

இந்த வீடியோ, @streetfoodjourn3y என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகள், இரண்டரை லட்சம் லைக்குகள், ஆயிரக்கணக்கான கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது. சிலர் இதைக் “அடடா… சாப்பாடா இது?” என வேதனைப்படும் நிலையில், பலர் இதை கண்டிக்கிறார்கள். “ஃபான்டா-வுடன் முட்டையா? இது எந்த சமையல் நூல்ல இருக்குன்னு சொல்லுங்கப்பா!” என ஒருவர் கேள்வியெழுப்ப, மற்றொருவர் “இத சாப்பிட்டா நேரா ஹாஸ்பிடல் தான்!” என நகைச்சுவை விமர்சனம் பதிவிட்டுள்ளார்.