பெங்களூரு நகரத்தில் ஓட்டும் ஒரு ஆட்டோ டிரைவர் சொன்ன தகவல்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்ட பதிவின்படி, அந்த டிரைவர் தனது வருமானம் மாதம் ₹2 லட்சம் முதல் ₹3 லட்சம் வரை என கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், ₹5 கோடி மதிப்புள்ள இரண்டு பங்களாக்களை சொந்தமாக வைத்திருப்பதாகவும், அவை இரண்டும் வாடகைக்கு விட்டுள்ளதால் நல்ல வருமானம் வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதே ஆட்டோ டிரைவர் ஒரு AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீட்டாளர் என்றும் கூறியுள்ளார்!

இந்த உரையாடலை, அகாஷ் ஆனந்தானி என்ற இளைஞர், சமூக வலைதளத்தில் பகிர, அது வேகமாக போல பரவி மில்லியனுக்கு மேல் பார்வைகள், ஆயிரக்கணக்கான லைக்குகள், கமெண்ட்களோடு வைரலாகி விட்டது. “அந்த ஆட்டோ டிரைவரை நானே சந்தித்தேன். அவர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சும், ஏர்பாட்ஸும் போட்டிருந்ததால் தான் இதை கேட்டேன்” என்கிறார் அகாஷ். “அதான், ஆட்டோ ஓட்டுவது தான் அவர் வாழ்க்கையின் முதல் வேலை… சனிக்கிழமைகளில் மட்டும் ஓடுவாராம்” எனவும் அவர் சொல்கிறார்.

இது உண்மையா? இல்லையா? என சந்தேகிக்கின்றனர் நெட்டிசன்கள். சிலர் “இந்தக் கதை மாதிரியே ஒரு ஸ்காம் இருக்குமே… டெலிகிராம் குரூப்புல ஏமாத்துறாங்க” என எச்சரிக்கின்றனர்.