உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்சியில், பொதுமக்களை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சாலை நடுவே அமைதியாக அமர்ந்திருந்த கன்று குட்டியை, அருகே வந்த மாருதி சியாஸ் கார் மோதியது. இந்த காட்சிகள் அருகில் இருந்த CCTV கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
झांसी
➡️सड़क पर बैठे बछड़े को कार ने कुचला
➡️बछड़ा 3 मीटर कार के नीचे घसिटता गया
➡️राहगीरों, दुकानदारों ने बछड़े की जान बचाई
➡️घटना सीसीटीवी कैमरे में कैद, वीडियो वायरल
➡️मऊरानीपुर कोतवाली क्षेत्र की घटना#Jhansi #Accident #CCTVVideo pic.twitter.com/Gqg2akzzYm— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 4, 2025
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவில், சாலை நடுவே அமைதியாக இருந்த கன்று குட்டிக்குப் பக்கத்தில், ஒரு “L board”கார் வேகமாக வந்தபோது நேரடியாக மோதும் காட்சி தெளிவாக உள்ளது. பின்னர், காரில் இருந்த ஒருவர் வெளியே வந்து காரை பின்னால் இயக்க கூறினார்.
ஆனால் முடியவில்லை. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து காரை பின்னோக்கி தள்ள முயற்சி செய்தனர். அந்த பின், அந்த கன்று குட்டி அங்கிருந்து பத்திரமாக சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
