அக்ரா மாவட்டம் கேராகர் பகுதியில் உள்ள குஸியாபுர் கிராமத்தில், அம்மன் சிலை ஊர்வலத்தின்போது 13 இளைஞர்கள் உட்டங் நதியில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம், உள்ளூர் மக்களிடம் இன்னும் மீள முடியாத மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுபோன்ற பேரிழப்புக்குப் பிறகும், அந்த கிராமத்தில் மதுக்கடை இயங்கி வருவது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
यूपी के आगरा में महिलाओं ने अंग्रेजी शराब के ठेके पर धावा बोला और लाखों रुपए की शराब तोड़कर चली गईं !!
यह वही गाँव है गां 2 दिन पहले देवी मूर्ति विसर्जन के समय 13 लोग डूबे थे।
अभी तक 7 लापता हैं। माना जा रहा है कि उसी के गुस्से में ये हंगामा हुआ। pic.twitter.com/1LWLYsz3ZQ
— ममता राजगढ़ (@rajgarh_mamta1) October 5, 2025
குறிப்பாக, மதுக்கடையின் அருகே திரண்ட பெண்கள், கடையை தாக்கி, மதுபாட்டில்களை சாலையில் நொருக்கி வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. மன வேதனையால் கொந்தளித்த பெண்கள், மதுக்கடையை முற்றிலும் தாக்கி, பல்லாயிரக்கணக்கான மதுபாட்டில்களை உடைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்ததும், அதிகாரம் ஏதும் விதிக்காத போலீசாரை நோக்கி பெண்கள் கோபமாக பதிலடி கொடுத்தனர். பின்னர், போலீசார் வந்ததும், நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், மதுபான பாட்டில்கள் லட்சக்கணக்கில் நாசம் ஆனது அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த பரிதாபகரமான விபத்தில் மூழ்கியவர்களில் ஏழு இளைஞர்களும் மூன்றாம் நாளாகியும் இன்னும் காணவில்லை. அவர்களை தேட சேனை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) வீரர்கள் இணைந்து, தற்காலிக அணை கட்டி, நதி நீரின் அளவை குறைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான கிராம மக்கள், மீட்பு நடவடிக்கைகளை துயரமாக பின்தொடர்ந்து வருகின்றனர்.
