2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்துடன் இந்திய பேட்டர்கள் ரன்களை சேர்த்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தாக்குதலில் திணறினர்.

இதையடுத்து இலக்கைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி சிட்ரா அமினைத் தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தானை கட்டுக்குள் வைத்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நடப்பு தொடரில் இந்தியாவுக்கு இது 2வது தொடர்ச்சியான வெற்றியாக அமைந்துள்ளது.