மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி லீக் சுற்றில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகிறது. கொழும்பில் நடைபெறும் இந்த போட்டியில் கேப்டன் ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணியும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் மோதும் நிலையில் டாசில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

இதனால் பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியின் போது டாஸ் போட்ட பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி கேப்டன்கள் கை கொடுக்கவில்லை. முன்னதாக ஆசிய கோப்பை போட்டியின் போதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போதும் டாசில் கேப்டன்கள் கைகுலுக்காத நிலையில் வெற்றிக்குப் பிறகு வழக்கமாக இரு அணிகளின் வீரர்களும் கை கொடுக்கும் நிலையில் அதுவும் நடைபெறவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ  இணையத்தில் தற்போது வைரலாகி  வருகிறது.