2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரபரப்பான போட்டியில் மோதுகின்றன. செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கைக்கு எதிரான தனது முதல் போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, நேற்று பாகிஸ்தானை எதிர்கொண்டு தனது இரண்டாவது போட்டியை விளையாடியது.
இந்தப் போட்டி கொழும்புவில் பரபரப்பாக தொடங்கிய நிலையில், டாஸ் போடும்போது ஏற்பட்ட குழப்பம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நாணயத்தை தூக்கிப் போட, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா ‘டெயில்ஸ்’ என அழைப்பு விடுத்தார். ஆனால் போட்டி நடுவர் அதை தவறாக ‘ஹெட்ஸ்’ எனப் பதிவு செய்து, விழுந்தது ‘ஹெட்ஸ்’ என்பதால் பாகிஸ்தான் டாஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு நான் ‘ஹெட்ஸ்’ கேட்கவில்லை, ‘டெயில்ஸ்’ தான் கேட்டேன் என பாகிஸ்தான் கேப்டன் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
Big Blunder from the match referee, at the toss Pakistan Capitan Fatima called “Tails” but the match referee mistook it as “Heads”. How’s this possible ?
Had this happened with India, all the heavens would have fallen
See 👇 @ICCpic.twitter.com/TWN4v3VXoV— Saurav Trivedi (@Auravauraa) October 5, 2025
“>
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்ததை தொடர்ந்து, இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கேப்டன் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாக இந்திய ரசிகர்கள் குற்றஞ்சாட்டி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
#INDvsPAK Cheating:
When Harmanpreet Kaur tossed the coin, Fatima called “tails.” However, match referee Shandre Fritz and announcer Mel Jones pronounced it “heads.” When the coin landed on the ground, it finally came up heads, and Fatima was awarded the toss. pic.twitter.com/KqXtLQ7pcM
— Abhimanyu Indian (@Abhi321997) October 5, 2025
“>
இதைத் தொடர்ந்து, டாஸ் போடும்போது இந்தியா-பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் கைகுலுக்குவதை தவிர்த்திருப்பதும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
