இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, ஒரு தாயின் அறியப்படாத வீரத்தை அழகாகக் காட்டி, பார்ப்பவர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. வீடியோவில், ஒரு தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கு உணவு ஊட்ட முயற்சி செய்கிறார், ஆனால் குழந்தைகள் அவர் சொல்லைக் கேட்காமல் ஓடிவிடுகின்றனர். தாய் வீட்டு வேலைகளுக்காகச் சென்றவுடன், குழந்தைகள் வீட்டில் உள்ள பழைய பொருட்களைத் தோண்டி, ஒரு புகைப்படத்தைக் கண்டுபிடிக்கின்றனர். அதில், அவர்களின் தாய் இந்திய ஜெர்சி அணிந்து, பதக்கம் வென்று மகிழும் காட்சி இருந்தது. இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த குழந்தைகள், அந்தப் படத்தை வீட்டில் இருந்த வயதான பெண்மணியிடம் காட்டுகின்றனர். அவர் ஒரு டேபிள் செல்ஃப் திறந்து, உள்ளே இருக்கும் பையை எடுக்கச் சொல்கிறார்.
குழந்தைகள் அதைத் திறந்து பார்க்கும்போது, உள்ளே ஏராளமான சான்றிதழ்கள், பதக்கங்கள், ஷீல்டுகள் இருந்தன. அப்போதுதான் அவர்களுக்கு, தங்கள் தாய் ஒரு இந்திய வீராங்கனை என்பது தெரிகிறது. இந்தக் கண்டுபிடிப்பு குழந்தைகளைப் பெருமிதத்தில் நிரப்புகிறது, அவர்கள் தாயை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்குகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
