இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பிளாஸ்டிக் சேர் தயாரிக்கும் செயல்முறையை படிப்படியாகக் காட்டி, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், முதலில் பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி, பின்னர் அதை தட்டி காயவைப்பதைப் பார்க்க முடிகிறது. அதன்பிறகு, காய்ந்த பிளாஸ்டிக்கை துண்டுகளாக உடைத்து, பொடியாக்கி, ஒரு இயந்திரத்தில் போட்டு, சேர் வார்ப்படத்தில் (அச்சு) ஊற்றி, இறுதியாக சேர் உருவாக்கப்படுகிறது. இந்த சுவாரஸ்யமான செயல்முறை பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடையே பரவி வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சேரின் பின்னணியில் உள்ள உழைப்பையும் தொழில்நுட்பத்தையும் புரிந்துகொள்ள உதவுகின்றன.