தீபாவளி நெருங்குவதும் பட்டாசு பிரியர்கள் சேட்டைகள் செய்ய தொடங்கிவிடுவார்கள். ஆனால், சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வந்த இந்த வீடியோவில், ஒரு நபர் இரண்டு முறை கையில் அணுகுண்டு போன்ற பட்டாசை வைத்து வெடிக்கிறார், ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. அடுத்து, அதிர்ச்சியளிக்கும் வகையில், ஒருவர் தலையில் வைத்துக்கொண்டு வெளியே பத்த வைக்கிறார். அப்போது அந்த வெடி தலையில் வெடிக்கிறது. ஆனால், அதன் பிறகு அந்த நபருக்கு என்ன ஆனது என்பது காணொளியில் காட்டப்படவில்லை, இது பார்ப்பவர்களை மிகவும் கவலைப்பட வைக்கிறது.

வீடியோவை காண

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “இது போன்ற ஆபத்தான செயல்களை ஒரு போதும் முயற்சி செய்ய வேண்டாம்” என்று எச்சரிக்கை கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். பட்டாசுகள் கொண்டாட்டத்திற்காகவே, ஆனால் பாதுகாப்பின்றி விளையாடுவது உயிருக்கு ஆபத்தாகிறது என அவர்கள் வலியுறுத்துகின்றனர். தீபாவளியின் மகிழ்ச்சியைப் பாதுகாக்க, அனைவரும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த வீடியோ எடுத்துரைக்கிறது.