மலைப் பாதைகளில் பயணம் செய்வது என்பது எப்போதும் ஒரு சவாலாகவே இருக்கும். சற்று கவனிக்காமல் நடந்தால் அதிர்ச்சிகரமான விபத்து நடந்து விடக்கூடும். அதுபோலவே ஒரு திகிலூட்டும் விபத்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஒரு மலைப்பாதையில், இறுக்கமான சுருண்ட சாலையில், ஒரு லக்சுரி கார், ஒரு லாரியின் பின்புறமாக பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாக இருந்தாலும், சில விநாடிகளில் விபரீதம் நிகழ்ந்தது.
बड़ी गाड़ियों से दूरी बनाए रखें!!
नतीजा आपके सामने हैं!!👇👇
छोटी गाड़ी वाला बचा हैं क्या ?? pic.twitter.com/OoRZ42uosU
— राजस्थानी मानस (@Manas___05) September 28, 2025
திடீரென அந்த லாரி ஏதோ காரணத்தினால் தனது கட்டுப்பாட்டை இழந்து, முன்னே செல்லாமல் பின் திசையில் சறுக்கத் தொடங்குகிறது. இதை எதிர்பார்க்காத அந்த காரின் டிரைவர், எந்த எதிர்வினையும் செய்ய முடியாத நிலையில் சிக்கிக் கொள்கிறார். சில நொடி கழித்து, அந்த லாரி நேராக காரின் மேல் ஏறி நொறுக்கி விடுகிறது.
அந்த கார் மின்னல் வேகத்தில் சிதறும் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் அளவிற்கு உள்ளது. ஆனால் அதிசயமாக, அந்த டிரைவர் உயிரோடு தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பாதைகளில் பெரிய வாகனங்களை பின் தொடர்வது பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணம், உண்மையில் ஒரு பெரிய தவறாக இருக்கலாம் என்பதை இந்த வீடியோ வெளிக்கொணர்கிறது.
வண்டி ஓட்டும் போது, குறிப்பாக மலைப் பாதைகளில், கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாக இந்த வீடியோ பரவுகிறது. பலரும் இந்த காட்சியை பார்த்து, மற்ற பயணிகளும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
