அமெரிக்காவின் சிகாகோ நகரில் உணவுப்பொருள் டெலிவரி செய்பவரின் சாகசத்தை காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் நடமாடும் ரோட்டில், டெலிவரி ஆள், சைக்கிளில் சென்றவாறு 10க்கும் மேற்பட்ட ஐசிஇ அதிகாரிகளை ஒரு நேரத்தில் ஏமாற்றி விட்டு தப்பிச் சென்ற காட்சிகள் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ICE ties to get this dude delivering food in a bicycle.
It did not go well.
This needs the Benny Hill treatment.
pic.twitter.com/n9ajY77m2j— Maine (@TheMaineWonk) September 29, 2025
வீடியோவில், ICE அதிகாரிகள் பலர் சேர்ந்து சைக்கிளில் வந்த டெலிவரி பாயை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த இளைஞர் தனது நுண்ணறிவும், வேகமும் கொண்டு குறுகிய இடங்களில் வழியைக் கண்டுபிடித்து, அவர்களை எல்லாம் முந்தி ஓடுகிறார். ஒரு பக்கம் அதிகாரிகள் சிக்க வைக்கும் முயற்சியில் தோல்வியுற்று விரக்தியுடன் காணப்பட, அந்த டெலிவரி பாய் ‘மாஸ்’ கதாநாயகனை போலவே அங்கிருந்து பறந்துவிடுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவ, மக்கள் பலரும் நகைச்சுவையுடன் விமர்சிக்கின்றனர். “ஒரே ஒரு சைக்கிள் பையனை 10 பேரால் பிடிக்க முடியல, வரி பணத்துக்கு இவங்க தான் வேலை செய்யுறாங்களா?” என ஒருவர் கேட்டுள்ளார். இது போன்ற நக்கலான கருத்துகளுடன், அரசின் செயல் திறனைப் பற்றி கேள்வி எழுப்பும் வரிகளும் சமூக ஊடகங்களில் பளிசென ஒலிக்கின்றன.
