அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இது அமெரிக்க திரைத் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கு முந்தைய அறிவிப்புகளில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார். மேலும், உலகின் பல முக்கிய போர்களை தானே முடிவு செய்ததாகவும், அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
