நியூயார்க்கின் புரூக்ளின் சுரங்கப்பாதை (walkway) நடைமேடையில் சமீபத்தில் நடந்த ஒரு அபூர்வ நிகழ்வு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இரண்டு எலிகள் பொதுவான தெரு சண்டை வீரர்களைப் போல ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவை காற்றில் குதித்து, தள்ளாடும் வகையில் அடிகளை பரிமாறிக்கொள்வது போன்ற செயல்களைச் செய்கின்றன; சிலருக்கு அது போலிஉணர்வை ஏற்படுத்தும் விதமாகத் தோன்றினாலும், சிலர் வேடிக்கையாக பார்த்து கருத்து பதிவிட்டுள்ளனர்.
NYC rats fighting > Yoda vs Dooku pic.twitter.com/HXgtgYyfG6
— Rohit Gupta (@guptro) August 29, 2025
மேலும் இந்த வீடியோ @guptro என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதை பிறகு பல நெட்டிசன்கள் நகைச்சுவையான கருத்துகளைத் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர் — ஒருவரின் கருத்து, “ஓ சகோதரரே! எலிகள் புரூஸ் லீ போன்று சண்டை போடுகிறது,” என்றார், வேறு ஒருவர், “அவை மனிதர்களைப் போல சண்டையிடுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்
