சமீபத்தில் பிரபலமான காமெடி நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவரது இறப்புக்கு முக்கிய காரணம் கல்லீரல் செயல் இழந்தது. கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவது மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது இரண்டு காரணங்களால் வருகிறது: ஒன்று, அதிகமாக மது அருந்துவது; இன்னொன்று, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை.
துரித உணவுகள், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும். வயிற்றுச் சுற்றி அதிக கொழுப்பு இருந்தால், உடனடியாக கல்லீரலை சோதித்துக் கொள்ளுங்கள். இது ரோபோ சங்கருக்கு ஏற்பட்டது போல, சரியான கவனம் இல்லாமல் ஆபத்தாக முடியும்.
கல்லீரல் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க, நல்ல உணவு முறையைப் பின்பற்றுங்கள். பைபர் அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள், பயறு வகைகளை தினசரி சாப்பிடுங்கள். புரோட்டின் நிறைந்த பருப்பு வகைகள், மீன், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். நட்ஸ் சாப்பிடுவது உதவும். மிக முக்கியமாக, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொரித்த உணவுகள், இனிப்பு நிறைந்த உணவுகள், மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த வழிகளைப் பின்பற்றினால், கல்லீரலில் படிந்த கொழுப்புகளை அகற்றி, ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
