கோவையில் பூ மார்க்கெட்டுக்கு ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து சென்ற இளம் பெண் அங்கிருந்து ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் வீடியோ எடுக்க கூடாது, இது போன்ற அரைகுறை உடைகளை அணிந்து இங்கு வரக்கூடாது என்று கூறினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக நிர்வாகி கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

 

உடை என்பது அவரவர் உரிமை என்பது சரிதான். ஆனால் இடம், பொருள், ஏவல் முக்கியம். கிளப்புக்கு அணியும் உடையை கோவிலுக்கு அணிந்து செல்வேன் என்று சொல்லலாமா? இதுவா பெண்ணியம். உள்ளாடை தெரியும்படி உடை அணிந்தால் யாரும் சொல்லக்கூடாது என்றால் எப்படி என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ஒவ்வொருவர் உடலமைப்பும் வேறு வேறு. அதை உணர்ந்து ஆடை அணிய வேண்டும். உள்ளாடை தெரிகிறது, பார்க்குறவங்க ரியாக்ட் பண்ணக்கூடாதுன்னா எப்படி?. தமிழ்நாட்டில் ஆண்களுக்கு கூட கண்ணியமான உடை எதிர்பார்க்கிறோம். அட வெள்ளக்காரங்க கூட இங்கு வரும்போது முழு சட்டை போடுகிறார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.