2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக அணியில் தயாரிப்பு வேகமடைந்துள்ளது. இந்த தேர்தல் வேலைத்திட்டங்களை முடுக்குவதற்காக, மத்திய பாஜக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழ்நாட்டுக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக மக்களவை உறுப்பினரும், பாஜக முக்கியத் தலைவருமான வைஜெயந்த் பண்டா, மற்றும் ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சரான முரளிதர் மொஹோல் ஆகிய இருவரையும் இன்று (செப்.25) நியமித்துள்ளார்.
இந்நியமனம், தமிழகத்தில் பாஜக தனது வேர்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகவும், எதிர்கால தேர்தலுக்கான திட்டத்துக்கு ஒரு புதிய கட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
