பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தைத் தீபாவளி போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறவுள்ளனர். தீபாவளி போனஸ் வழங்குவதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.1,866 கோடி செலவாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
