தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் தீர்மானம் விரைவில் வெளிவர உள்ளது.
கடந்த ஆண்டு, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்பட்டு மகிழ்ச்சி ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கும் அதேபோல போனஸ் வழங்கும் திட்டம் குறித்து விவாதம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த போனஸ் அறிவிப்பு, வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அரசு ஊழியர்கள் தீபாவளியை மேலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
