உணவு டெலிவரி சேவைகளை வழங்கி வரும் Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள், சமீபத்தில் ‘Rain Fee’ எனப்படும் புதிய கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
மழை பெய்யும் சூழலில் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கான கூடுதல் செலவாகவே இந்த கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்தாலும், பயனர்களிடையே இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த 22-ம் தேதி முதல் டெலிவரி சேவைகளுக்கு 18% சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனுடன் கூடுதலாக ‘Rain Fee’ சேர்க்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களின் சுமையை மேலும் அதிகரிக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமூக வலைதளங்களில் இதை கண்டித்த பலரும், “இனி மழைக்கும் தனி சார்ஜ், நாளைக்கு வெயில் Fee, ரோடு பள்ளம் Fee, போக்குவரத்து நெரிசல் Fee போன்ற பெயர்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுமோ” என கிண்டலடித்து வருகின்றனர்.
ஏற்கனவே டெலிவரி கட்டணமும், பேக்கிங் கட்டணமும் தனியாக வசூலிக்கப்படும் நிலையில், புதிய சேவை கட்டணங்கள் பயனர்களின் தினசரி செலவுகளை சிரமப்படுத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
