லண்டன் நகரின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இங்கு பணியாற்றிய இரு பெண் ஊழியர்கள், 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுவனிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக வழக்குகள் எழுந்துள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து, லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லிண்டி லீ (வயது 44), காப்பகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தவர். அவருடன் பணியாற்றிய மற்றொரு பெண் ஊழியரான மோர்கன் குவிக்லி (வயது 29) என்பவரும், குற்றச்சாட்டின் முக்கிய பாத்திரமாக உள்ளார். குவிக்லி, அந்த சிறுவனுக்கு போதைப் பொருள்கள் வழங்கி, பாலியல் செயல்களில் ஈடுபட தூண்டியிருக்கிறார் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், லிண்டி, தனது உடலை வலைவீசும் வகையில், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்து, உள்ளாடை இல்லாத நிலையில் சிறுவனை கவர முயன்றதாகவும், பல முறை அவனிடம் விரும்பத்தகாத நடத்தை காண்பித்ததாகவும் சாட்சிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த சிறுவனின் தாயார் நேரடியாக இந்த தகவலை வெளிப்படுத்தியதோடு, மற்றொரு பெண் ஊழியரும், இந்த நிகழ்வுகள் அனைத்தும் தங்களது கண்களுக்கு நேரில் நடந்தவை என கூறி சாட்சியளித்துள்ளார்.

இந்த வழக்கில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட லிண்டிக்கு 23 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவனின் மானத்தையும், மனநலத்தையும் காயப்படுத்தியதாக நீதிபதி கூறியுள்ளார்.

மற்றொரு குற்றவாளியான குவிக்லிக்கு, சட்டவிரோத போதைப்பொருள் வழங்கியதற்காக, 12 மாத கால சமூக சேவை மற்றும் 20 நாட்கள் மறுவாழ்வு பயிற்சி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 12 மாத காலம் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளைத் துப்பறியும் அதிகாரி டோனி மீகின்ஸ் தலைமையில் போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையின் போது, இருவரும் ஏற்கனவே பல தவறுகளை செய்துள்ளதையும், குறிப்பாக லிண்டி குற்றச்சாட்டுகளை மறுத்தபோதும், அவர் செய்த செயல்கள் தெளிவாக நிரூபிக்கப்பட்டதையும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வழக்கு இங்கிலாந்து முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.