ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரான், நியூயார்க்கில் உள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவருடைய வாகனம் நியூயார்க் போலீசார் திடீரென நிறுத்தினர். ஏனென்றால் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வாகனப் பேரணைக்காக அனைத்து சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டதால், மக்ரானின் வாகனமும் நகர முடியாமல் நியூயார்க்க் தெருவில் நின்றுவிட்டது.
New York’ta, Trump’ın konvoyu için yolları kapatan polis, Macron’un aracını da durdurdu.
Araçtan inen Macron, Trump’ı arayarak esprili bir dille yolu açmasını istedi.
pic.twitter.com/4UzFu18ZdP— Solcu Gazete (@solcugazete60) September 23, 2025
சாலையில் நிறுத்தப்பட்ட நிலையில், மக்ரான் காரிலிருந்து வெளியே வந்து, டிராஃபிக் போலீசாருடன் நேரில் பேசினார். “மன்னிக்கவும் திரு. அதிபரே, இப்போதெல்லாம் மூடப்பட்டுள்ளது” என அதிகாரி ஒருவர் அவர் முன்னிலையில் விளக்கம் அளிக்கிறார். இதற்கிடையே மக்ரான் தனது மொபைலை எடுத்து ட்ரம்புக்கு நேரடியாக அழைத்துள்ளார். சிரித்தவாறே “நான் இப்போது தெருவில் நிக்குறேன்… உங்களுக்காக எல்லாம் மூடப்பட்டுருக்கு!” என அவரிடம் கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனையடுத்து, சில நிமிடங்களுக்குள் பாதசாரிகளுக்கான வழிகள் திறக்கப்பட்டதோடு, மக்ரான் தனது குழுவுடன் நடந்து சென்றார். இந்த நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்களுடன் புகைப்படங்கள் எடுத்து, இயல்பாக கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் தரப்பிலும், சமூக வலைதளங்களிலும் இந்த சம்பவம் தற்போது விவாதமான தலைப்பாகி வருகிறது.
