சமூக வலைதளத்தில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஜின் மின்ஸ்கி என்ற பெண், தனது மூக்கில் எண்டோஸ்கோப் கேமரா பொருத்தி, 18 இஞ்ச் நீளமுள்ள ஒரு வாளை முழுவதுமாக விழுங்கும் கொடூரமான செயலை அரங்கேற்றி இருக்கிறார். இந்த நிகழ்வு நியூயார்க் நகரில் உள்ள கோலம்பியா பல்கலைக்கழக மருத்துவமனையில் படமாக்கப்பட்டுள்ளது என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.instagram.com/reel/DOeH164Ea0I/?igsh=MXZ0OXkwZTV3b25rZw%3D%3D

இந்த செயலை ஜின், நேரலைக்காக பதிவு செய்திருக்கிறார். அவரது தொண்டைக்குள் வாள் நுழையும் பக்கவாட்டுக் காட்சி, வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் “இதுவே உண்மையான திறமை” என்று சிலர் பாராட்டியிருக்க, இன்னொருபக்கம் “உயிருக்கு ஆபத்தான வீரம்”, “இதற்கெல்லாம் அனுமதி எப்படி தான் கிடைக்கிறது!” என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பயத்தையும் கிளப்பியுள்ளது.

இவ்வீடியோ, @columbia\_voice என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் செப்டம்பர் 11ஆம் தேதி பகிரப்பட்டுள்ளது. தற்போது வரை 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து, 14,500 பேர் லைக்குடன் தங்களது ஆச்சரியத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். “வாள் விழுங்குவது இதுவரை பார்த்ததிலேயே மிகப்பெரிய உயிர் ஆபத்து” என்ற தலைப்பில் பலரும் தங்களது பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.