கொல்லம் மாவட்டம் பூனலூர் அருகே கூத்தனாடி பகுதியில், குடும்ப தகராறு காரணமாக 39 வயது ஷாலினி என்ற பெண், அவரது கணவர் ஐசக் என்பவர் கொலை செய்துள்ளார். சம்பவம் நடந்து முடிந்ததும், கொலை செய்ததை ஐசக் ஃபேஸ்புக் லைவ் மூலம் வெளிப்படையாக ஒளிபரப்பி, மனைவியை நம்பிக்கையில்லா மற்றும் நகை முறைகேடு குற்றச்சாட்டுகளால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறினார்.

வீட்டின் சமையலறைக்கு பின்னால் உள்ள குழாய் அருகே குளிக்கச் சென்றிருந்த போது, காலை 6.30 மணியளவில், ஐசக் அவரை கடுமையாக தாக்கியதாக எப்.ஐ.ஆர்-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. கழுத்து, மார்பு மற்றும் முதுகில் ஆழமான கத்திக்காயங்கள் ஏற்பட்டதால், ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஐசக் நேரடியாக பூனலூர் காவல்நிலையத்திற்கு சென்று, “நான் தான் என் மனைவியை கொலை செய்தேன்” என ஒப்புக்கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, ஷாலினியின் உடலை மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். தம்பதியரின் 19 வயதான மகனின் புகாரின் பேரில்,  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது போலீசார் வீட்டை முற்றுகை செய்து, தடயவியல் ஆய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.