மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த 24 ஆண்டுகளில், ஒருநாளும் விடுமுறை எடுக்காத ஒரே மனிதர் பிரதமர் நரேந்திர மோடிதான். இத்தகைய அர்ப்பணிப்பு தற்செயலாக உருவாகும் ஒன்று அல்ல. இது, நாட்டிற்கான அவரது முழுமையான அர்ப்பணிப்பின் விளைவாகும்.”
“ஒரு சாதாரண கட்சி பணியாளராக தொடங்கி, பாஜகவின் தேசிய தலைவராக உயர்ந்தார். பின்னர் குஜராத்தின் முதல்வராகவும், அதன் பின் மக்கள் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் பிரதமராகவும் பதவியேற்றார். மோடியின் செயல்திறனை அருகிலிருந்து காணும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது.” அதேபோல், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பாகவும் அமித் ஷா பேசினார்.
முதுகெலும்பு கொண்ட, தன்னம்பிக்கையுடன் நிலைத்திருக்கும் வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மோடி உருவாக்கினார். அவருடைய உறுதியும், பார்வையும் உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது” என தெரிவித்தார்.
மேலும் நேர்காணலில் பிரதமரின் நிரந்தர உழைப்பு, தேசியத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் தலைமைக் குணாதிசயங்களை அமித் ஷா உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துள்ளார்.
–
