திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில், “இங்கு நெல் மூட்டைக்கு ரூ.40 திமுகவினர் கொள்ளையடிக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டு பெரும் கவனத்தை ஈர்த்தது.

இதில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடிக்கடி மோசடியை சந்திக்கின்றனர் என்பதையும் விஜய் கூறினார்.  திமுக அரசின் கீழ் நடக்கும் அலட்சியம் மற்றும் லஞ்ச சம்பந்தப்பட்ட புகார்கள் குறித்து விவசாயிகள் என்னிடம் நேரடியாக  தெரிவித்தனர் என் பரப்புரையில் உணர்ச்சி பூர்வமாக கூறினார்.

இந்நிலையில், திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன்  விளக்கம் அளித்துள்ளார். “நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.40 கொடுப்பது லஞ்சமாக அல்ல, அன்பளிப்பு மட்டுமே” என்று அவர் கூறியிருப்பது புதிய சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

ஒரு அரசு அதிகாரபூர்வ முறையில் நடக்கும் கொள்முதல் பணியில் ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் பணம் கொடுப்பது என்னவென்று பல தரப்பிலிருந்து கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பிலும் உள்ளே  குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.