பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழ் சினிமாவின் பரிச்சயமான முகமுமான வடிவேலு, சமீபத்தில் மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“அன்று ஊரில் இல்லை; வீட்டுக்கு சென்று பார்த்து வருவேன்” என  கூறிய அவர், கலைஞர்களை குறிவைக்கும் யூடியூபர்களின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். “பெரிய நடிகர், சின்ன நடிகர் என பேதம் பார்க்காமல், யூடியூப்பை ஓர் ஆயுதமாகக் கொண்டு, சிறிய விஷயங்களை பெரிதாக்கி, தவறாக பேசுகிறார்கள். இதற்கு நடிகர் சங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப் பேசுவோருக்கு இடமில்லை” என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “யூடியூபர்களை ஊக்குவிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் சிலர் பங்கேற்கின்றனர். இந்த செயல்கள் நடிகர்களின் நலனுக்கு எதிரானவை.

விமர்சனங்கள் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே வெளியிடப்படுவது சினிமாவையே அழிக்கும் நோக்கத்துடன் இருக்கிறது” எனவும் கூறிய வடிவேலு, “நடிகர் சங்கம் என்பது கலைஞர்களை பாதுகாக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். யாரையும் விட்டு விடக்கூடாது; போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்வது தான் வழி” என துணிவுடன் தெரிவித்தார்.