தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு மாப்பிள்ளையூரணி திரேஸ் நகரை சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையில் ராமசுப்பு கர்நாடகாவில் தங்கி பணி செய்து வந்தார். இதனால் சக்தி மகேஸ்வரி, ராஜேந்திரன் இருவரும் பல வருடங்களாக கள்ளக்காதலில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ராஜேந்திரனின் 16 வயது மகன் கள்ளக்காதல் உறவை கைவிடும்படி சக்தி மகேஸ்வரியிடம் கேட்டுக்கொண்டார். எனினும் சக்தி மகேஸ்வரி கள்ளக்காதலை கைவிட மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த ராஜேந்திரனின் மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு சிறுவன் இருவரும் கடந்த 15 ஆம் தேதி சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனின் மகன் மற்றும் அவரது நண்பரான சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில் ராஜேந்திரனின் மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவியை அவரது மற்றொரு நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.