ஒடிசா மாநிலத்திலுள்ள கெண்ட்ரபரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு தாமோதர்பூர் கிராமத்தில் வசித்து வரும் ஜிண்டு ஜனா என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி கடந்த 10ம் தேதியன்று ஜிண்டுவை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஜிண்டு ஜனாவின் தாய் சிறுமியை உடனடியாக அவருடைய வீட்டில் விடும்படி கூறியுள்ளார்.

அதன்படி சிறுமியை அழைத்து சென்ற ஜிண்டு ஜனா வீட்டிற்கு செல்லாமல் நேராக முந்திரி தோப்புக்கு சென்றதாக கூறப்படுகிறது. இங்கு ஜிண்டு ஜனா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து சிறுமி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜிண்டு ஜனாவை கைது செய்ததோடு சிறைச்சாலையில் அடைத்தனர். இவ்வாறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.