உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கணவனை இழந்த  ஒரு விதவையுடன் இளைஞர் ஒருவர் பேஸ்புக் வழியாக நட்பை வளர்த்தார். இரண்டு குழந்தைகளின் தாயான அந்த பெண், சோஹில் என்ற ஓவியராக வேலை பார்க்கும் இளைஞனைத் தொடர்புகொண்டு, அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இரவு நேரத்தில், அந்த பெண் தனது குழந்தைகளை ஒரு அறையில் தூங்க வைத்துவிட்டு, அதை வெளியே பூட்டி, சோஹிலை வேறு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் சமரச நிலையில் இருந்த வேளையில், அந்த பெண்ணின் மாமனார் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்ததும், அவர்கள் உறவு வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியினர் கோபமடைந்து சம்பவ இடத்திற்கு வந்து, சோஹிலை கட்டை, கல்லால்  உதடுகள் மற்றும் முகத்தில்  கடுமையாக தாக்கினர். அந்தச் சூழ்நிலையில் போலீசார் வந்து குற்றம் சாட்டப்பட்டவரை சிரமப்பட்டு மீட்டனர்.

மேலும் சோஹிலின் செல்போனில் அந்தப் பெண்ணின் ஆபாச வீடியோக்கள் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து அந்த பெண்ணின் மாமனார் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சோஹில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் போலீசாரின் விசாரணையில், அந்தப் பெண் “சோஹிலுடன் எந்தவிதமான காதல் உறவும் இல்லை” என வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சோஹிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என இன்ஸ்பெக்டர்  தெரிவித்துள்ளார். பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.