உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் கோட்வாலி நகரில் செயல்பட்டு வரும் ஆர்.ஆர். இன்டர் கல்லூரியில், 11ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவு நேரத்தில், இன்னும் சிறிது நேரம் இருக்கும்போது மாணவன் மற்றொரு வகுப்பில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. ஆசிரியர் வருவதை அறிந்ததும், மாணவன் மற்றொரு வாயிலாக வெளியேற முயன்றுள்ளார். இதைக் கண்ட ஆசிரியர், மாணவனை தடுத்து நிறுத்தி பிடித்து வைத்து , கைகாலால் அடிக்கத் தொடங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
हरदोई में शिक्षक बना हैवान, 11वीं के छात्र उबैद को लंच टाइम में दूसरी क्लास जाने पर बेरहमी से पीटा !!
हरदोई जिले के शहर कोतवाली क्षेत्र स्थित आरआर कॉलेज में एक दिल दहला देने वाली घटना सामने आई है. यहां के शिक्षक मनोज कुमार ने 11वीं कक्षा के छात्र उबैद को महज लंच के समय दूसरी… pic.twitter.com/78a28MIvX3
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) September 20, 2025
“>
பின்னர், மனோஜ் குமார், சுரேந்திர பாண்டே, அரவிந்த் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் மற்றும் இன்னும் இருவர் சேர்ந்து, மாணவனை முதல்வரின் அறைக்கு அழைத்து சென்று, நிற்க வைத்தபடி கடுமையாக தாக்கியதாக புகார்கள் எழுந்துள்ளன.
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், மாணவனை கழுத்தில் மிதித்துக் கொண்டு தாக்கும் அதிர்ச்சிகரக் காட்சிகள் பதிவாகியுள்ளன. மாணவனை அடித்ததோடு நிற்காமல், போலீசில் புகார் அளித்தால் உன் எதிர்காலம் பாழாகிவிடும் என மிரட்டியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
हरदोई-कक्षा 11 के छात्र को टीचर ने बेरहमी से पीटा, लंच टाइम में मित्र की क्लॉस में जाकर बैठा था
पिटाई का वीडियो सोशल मीडिया पर वायरल, पीड़ित छात्र आरआर इंटर कॉलेज में पढ़ता है
तहरीर के आधार पांच शिक्षकों पर केस दर्ज, कोतवाली शहर थाना क्षेत्र नाघेट रोड का मामला#Hardoi… pic.twitter.com/yinix4tgK8
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) September 20, 2025
“>
இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரின் புகாரின் அடிப்படையில், நகர தலைமை நிர்வாக அதிகாரி அங்கித் மிஸ்ராவின் உத்தரவுப்படி, மாணவனை தாக்கிய மூன்று பேரின் மீது ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத இருவரும் விசாரணையின் படி குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனத்தில் மாணவனிடம் இவ்வாறு நடந்த கொடூரம், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது. தற்போது சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
