தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ஒரு ஆணும், பெண்ணும் வந்திருந்தனர். இவர்கள் விஷம் குடித்து விட்டதால் எங்களை காப்பாற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் உதவி கேட்டனர். இதனால் காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் இருவரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது போலீஸ் நிலையத்திற்கு விஷம் அருந்திய நிலையில் வந்தவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மகன் தங்கவேல்சாமி மற்றும் அவரது வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த ஒரு பெண் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இருவரும் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
