செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன வெண்மணி கிராமத்தில் வசித்து வருபவர் தான் லட்சுமணன். கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை குழந்தை தீபிகா பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் எதிர்பாராத விதமாக பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் தீபிகாவின் மீது கொட்டியது. இதன் காரணமாக வலியில் துடித்த தீபிகாவை மீட்டு பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பின் மேல் சிகிச்சைக்காக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சுடுதண்ணீர் கொட்டி பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.