தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய் இன்று (செப்.20) திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

வருகையை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் திமுகவின் சார்பில் பரபரப்பான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, “நாம் செய்து முடித்தோம்” எனும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளம்பரங்களை உள்ளடக்கிய போஸ்டர்கள் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்களை ஒட்டும் பணி, திமுக மாவட்டச் செயலாளர் தலைமையில் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல் போஸ்டர் ப்ளான், விஜயின் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில்  அங்கு வருவதற்குள், திமுக தனது சாதனைகளைநினைவு கூற முயன்றுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

விஜய் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுவரும் சூழலில், இவ்வாறு போஸ்டர் மூலமாக தங்களின் ஆட்சிச் சிறப்புகளை நினைவூட்டும் முயற்சி, எதிர்க்கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், பிரசார மேடைக்கு அப்பாலும், சுவரொட்டிகளில் கூட அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளதை இந்நிகழ்வு காட்டுகிறது.