2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பு பயணத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (செப்.20) நாகை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதில் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், “இறால் பண்ணைகள் முறையற்ற முறையில் செயல்படுகின்றன. கடலோர அலையாத்திக்காடுகள் அழிக்கப்படுகின்றன. இவற்றை அரசு முறையாக கட்டுப்படுத்தவில்லை. நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் அரசு தன்னிச்சையாக மீன் தொழிற்சாலைகள், கடல்சார் கல்லூரி கொண்டு வர இயன்ற போதும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.

மேலும், “நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் தேவை மிக அதிகம். காவிரி நீரை கொண்டு வந்து தீர்க்கலாம். ஆனால் அந்த முயற்சி எங்கே? அரசு சாதனை என்ன? வெளிநாட்டு முதலீடுகள் பற்றி சி.எம். சார் பேசும்போது சிரிச்சுக்கிட்டே பேசுறாங்க.

ஆனா அதுல சத்தியமா மனசுல இருந்து உண்மை இருக்கா? வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பினார். விஜயின் இந்த உரை, திமுக ஆட்சியை கேள்விக்குள்ளாக்கி, பொதுமக்களிடையே அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.