நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின்போது, அந்தக் கட்சியின் தலைவர் விஜய், பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
தனது முதற்கட்ட பிரச்சாரத்தில் பெரம்பலூர் செல்ல முடியாமல் போனதைக் காரணமாகக் கூறிய அவர், “அங்கு பேரன்புடன் காத்திருந்த மக்களை சந்திக்க இயலாமல் போனது என் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களிடம் மனமுவந்த மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சியில் மைக் வயர் வெட்டுதல், அரியலூரில் மின்சாரம் துண்டிப்பு போன்ற தடைகள் தவெக பரப்புரை மீது திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக குற்றம்சாட்டிய விஜய், “என்ன ஸ்டாலின் சார்! மிரட்டி பாக்குறீங்களா? இதற்கெல்லாம் இந்த விஜய் அஞ்ச மாட்டான்” என உறுதியுடன் கூறினார்.
தொடர்ந்து தனது மக்கள் சந்திப்பு பயணத்தை விடாமல் முன்னெடுத்து செல்லும் விஜய், திமுக ஆட்சி மீது கடும் விமர்சனங்களை தொடர்கின்றார். இது, அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
