பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு கல்வி சார்ந்த அறிவிப்புகள் செய்யப்பட்டன.
இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்” என அறிவித்தார். இது தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடப்பிரிவில் ஆர்வம் அதிகரிக்கவும் உதவும் வகையில் செயல்படும் என்றார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
